மீண்டுவா - மனிதா மீண்டுவா!

மீண்டுவா மனிதா
மீண்டுவா,
கொரோனா தாண்டவத்திலிருந்து
மீண்டுவா...

உலகமெல்லாம் ஊரடங்கில் ஒய்ந்துபோக,
உள்ளமெல்லாம் பேரிடரில் உறைந்துபோக,
கண்களெல்லாம் கண்ணீரால் கரைந்துபோக,
துன்பமெல்லாம் இன்றோடு மறைந்து போக…

மீண்டுவா மனிதா
மீண்டுவா,
கொரோனா தாண்டவத்திலிருந்து
மீண்டுவா...

நிகழ்காலம் புரியாத புதிராக போக,
எதிர்காலம் கேள்வி குறியாக மாற,
எங்கிருந்தோ நீ இங்குவந்தாய் - கொரோனா,
எல்லைகள் தாண்டி எங்கு வந்தாய்?

மீண்டுவா மனிதா
மீண்டுவா,
கொரோனா தாண்டவத்திலிருந்து
மீண்டுவா...

நம்பிக்கையுடன்
சா, தணிகை.

Previous
Previous

வசந்தம் - Spring

Next
Next

ஒட்டாவா தமிழ் சங்கம் வலைப்பதிவு Welcome to the Ottawa Tamil Sangam Blog!