கரோனா

மறைந்திருந்து தாக்கும் மர்மம் என்ன?
மனிதன் உள்ளே வாசமா?
அதற்கு நாங்க சும்மா இருப்போமா? கரோனா?
மறைந்திருந்து தாக்கும் மர்மம் என்ன?

எல்லா தேசமும்....உலகில் உள்ள எல்லா தேசமும்
திக்கு அனைத்திலுமே பரவி மனித இனத்தில் புகுந்து
மறைந்திருந்து தாக்கும் மர்மம் என்ன?

எங்கிருந்தாலும் உன்னை நாங்கள் எதிர்ப்போம்
உன்னை அண்ட விடாமல் வழிகள் பல கண்டு பிடிப்போம்
மருந்து இன்னும் கண்டு பிடிக்கலை என்ற தைரியமா
ஒரு வாக்ஸீன் கண்டு பிடிக்காமல் விடுவோமா

ஊர் அடங்கு இருக்கலாம்
மனிதநேயம் அடங்காது கரோனா
மறைந்திருந்து தாக்கும் மர்மம் என்ன?

வீட்டிலேயே அடைப்பட்டாலும் கடமை செய்வோம்
நாட்டில் சேவை செய்யும் அஞ்சாநெஞ்சங்களுக்கு நன்றி சொல்வோம்
வாட்ஸ் ஆப் வம்பு மடத்தில் கவலை தீர்ப்போம்
பேட்டைக் கடையில் தொற்ற பார்க்கிறாய் கள்வனைப் போல்

ஓடிடு போய்விடு விட்டுடு கோவிடு
மறைந்திருந்து தாக்கும் மர்மம் என்ன?

ஸ்கூல் மூட ஆபீஸ் மூட கல்லூரி மூட

சின்ன பிசினஸ் கடைகள் மூட

டென்டிஸ்ட் மூட ப்யூட்டிஷியன் மூட கோவிலும் மூட    
ரெஸ்ட்டாரென்ட்டு தியேட்டர்கள் மூட

உறவாட விளையாட பிரார்த்திக்க zoom இருக்கு. நீ என்ன செய்வாய்?

மனித இனம் பிழைத்திடும். எகாநமி தழைத்திடும்
தலை விரித்தாடும் கொரொனா அழிந்திடும்  

மறைந்திருந்து தாக்கும் மர்மம் என்ன?
மனிதன் உள்ளே வாசமா?
அதற்கு நாங்க சும்மா இருப்போமா? கரோனா?

மறைந்திருந்து தாக்கும் மர்மம் என்ன?

- அனு பிரகாஷ் (Anu Prakash)

Previous
Previous

அன்று ….பௌர்ணமி இரவில் நடந்ததென்ன ?

Next
Next

வசந்தம் - Spring